எமது பண்ணையினை 2022 ஆண்டு பொழுதுபோக்கிற்காக நான்கு ஆடுகளுடன் ஆரம்பித்தோம். இவற்றின் மூலம் எமக்கு மனஅமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைத்தது. இந் நிலையில் இலங்கையில் இருந்து வந்த உறவினர்களின் ஊக்குவிப்பாலும் சரீர உதவியாலும் தற்போது எங்களிடம் நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகள், செம்மறி ஆடுகள், கோழிகள், வாத்துக்கள் என்பவற்றுடன் மரக்கறி தோட்டமும் உள்ளது. நாங்கள்; கனடாவில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம். இதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நீங்களும் பெறுவதற்காக எங்களால் முடிந்த சகல உதவிகளையும் செய்வோம்.
எமது தொலைநோக்கு பார்வை எதிர்வரும் காலங்களில் ஆரோக்கியமான இறைச்சிக்களையும், ஆட்டுப்பால் மற்றும் முட்டை என்பவற்றை எமது மக்களுக்கு கொண்டு சேர்ப்பதாகும்.
எங்களால் ஒரு விதையை பயிரிட்டு அது நாற்றாகி மரமாகி அதிலிருந்து பலன் கிடைக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அளப்பரியது.
வரலாறு
மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கினங்களுள் ஆடும் ஒன்றாகும். உடற்கூறியல் ஆடுகளில் இனத்தைப் பொறுத்து உடல் எடை வேறுபடுகிறது. சிறிய ஆடுகள் 20-27 கிலோ எடையில் இருந்து பெரிய ஆடுகளான போயர் ஆடு போன்றன 140 கிலோ எடை வரை வளருகின்றன.
கொம்புகள்
பெரும்பாலான ஆடுகளுக்கு இயற்கையாகவே இரண்டு கொம்புகள் உண்டு. அவற்றின் வடிவமும் அளவும் ஆட்டினத்தைப் பொறுத்து மாறுபடும். இவற்றின் கொம்புகள் கெரட்டின் முதலான புரதங்களால் சூழப்பட்ட எலும்புகளால் ஆனவை. ஆட்டின் கொம்புகள் அவற்றின் பாதுகாப்புக்காவும் அவற்றின் ஆதிக்கத்தையும் எல்லையைக் காக்கவும் பயன்படுகின்றன.
செரிமானமும் பாலூட்டலும்
ஆடுகள் அசை போடும் விலங்குகள் இவை நான்கு அறை கொண்ட இரைப்பையைக் கொண்டுள்ளன. மற்ற அசை போடும் விலங்குகளைப் போலவே இவையும் இரட்டைப் படையிலான குளம்புகளைக் கொண்டுள்ளன. பெண் ஆடுகளின் மடியில் இரு காம்புகள் உள்ளன. எனினும் விதிவிலக்காக போயர் ஆட்டுக்கு மட்டும் எட்டு காம்புகள் வரை இருக்கலாம்.
கண்கள்
ஆடுகளுக்கு கண்ணின் கருமணியானது கிடைமட்டமாக கோடு போன்று காணப்படுகிறது.
தாடி
கிடா, பெண் ஆடுகள் இரண்டுக்குமே தாடி உண்டு.
பயன்பாடு
பொதுவாக ஆடுகள் 15 முதல் 18 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. இறைச்சியும் பாலும் பெறுவதற்காக ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. ஆட்டிறைச்சி பொதுவாக தெற்காசிய நாடுகளில் கோழியிறைச்சிக்குப் பிறகு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
கனடா ஆட்டு இனங்கள் கனடாவில் பல ஆடுகளின் இனங்கள் உள்ளன. அவை போயர் ஆடு, கீகே ஆடு, பல்லை ஆடு என பல வகைகள் உள்ளன.